கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தை தழுவியது தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. அவர் சார்ந்த கட்சியனரையும் தாண்டி அவர பிடிக்காதவர்களுக்கு கூட இது அதிர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக அவர் மருத்துவமனையில் சிக்கிசை பெற்றுவந்ததாக சொல்லப்பட்டதும், ஆனால் அதற்கான ஆதாரங்கள் வெளியாகததும் மக்களிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
இதே சந்தேகத்தை முன் வைத்து தமிழகத்தின் ஒரு சாதாரண பிரஜை என்கிற நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகை கௌதமி.. அதில், முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், அதன்பிறகு அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோயும் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது..
சில நாட்கள் கழித்து ஜெயலலிதாவின் உடல் நலம் தேறிவருகிறது என்றும் சொல்லப்பட்டது.. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீரென அவர் மரணமடைந்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.. அவரது மரணத்தில் நிலவும் சந்தேகங்களை போக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறி கோரிக்கை வைத்துள்ளார் கௌதமி.
கடந்த சில நாட்களுக்கு முன் நமது பிரதமர் மோடியை கௌதமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.