பொங்கல் வெளியீடு என்பதால் ‘வீரம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத்தின் இசையை மிகப்பெரிய பலமாக கருதுகிறார்கள் அஜித்தும் இயக்குனர் சிறுத்தை சிவாவும். இந்தப்படத்தின் பாடல்களால் கவரப்பட்ட ‘ஜங்லீ மியூசிக்’ நிறுவனம் இதன் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. மேலும் சூட்டோடு சூடாக ஆடியோ ரிலீஸையும் நடத்த முடிவு செய்துள்ளது.
அஜித் எப்போதுமே மற்ற பட விழாக்களில் மட்டுமல்ல, தன் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கூட கலந்துகொள்வது இல்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். அதனால் டிசம்பர் 20ஆம் தேதி இசைவெளியீட்டு விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
அதற்கு அடுத்தநாளான 21ஆம் தேதி தான் விஜய்யின் ‘ஜில்லா’ பட பாடல்களும் எந்த விழாவும் ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.