டிசம்பர்-16ல் ‘என்னமோ நடக்குது’ இசை வெளியீட்டு விழா

64

ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் வரும் காதலும் அதன் தொடர்ச்சியாக சமுதாயத்தின் இரு பெரும் தூண்களிடையே சிக்கி போராடி அவன் வெற்றி பெரும் கதைதான் ‘என்னமோ நடக்குது’. சென்னை-28, நாடஓடிகளில் கலக்கிய விஜய் வசந்த் தான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் பிரபு மற்றும் ரகுமான் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற இயக்குநர் ராஜபாண்டி இப்படத்தின் மூலம் திரை உலகில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் வ.வினோத் குமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இவர் விஜய் வசந்த்தின் சகோதரர் தான்.

பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை(டிச-16) நடைபெற இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.