கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் ‘மிர்ச்சி’. ஆந்திர சினிமாவின் ‘ரிபெல்ஸ்டார்’ பிரபாஷ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்த இந்தப்படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
தற்போது இந்தப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நான் ஈ புகழ் சுதீப் இந்தப்படத்தின் உரிமையை வாங்கி பிரபாஸ் கேரக்டரில் நடிப்பதோடு அவரே படத்தை இயக்குகிறார். அனுஷ்கா நடித்த கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இதன்மூலம் கன்னட திரையுலகில் காலடி எடுத்துவைக்கிறார் வரலட்சுமி.
ஏற்கனவே கன்னடத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ளார் சுதீப். இவர் ஏற்கனவே, தமிழில் வெற்றிபெற்ற சிங்கம் படத்தை கெம்பே கவுடா என்கிற பெயரில் கன்னடத்தில் இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.