சிபிராஜ் படத்தில் இணைந்தார் வரலட்சுமி..!

118

varalaksmi-in-sibiraj-film

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ படத்தின் ஐந்து நிமிட காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டார்கள்.. அந்த ஐந்து நிமிடங்களிலேயே சாதாரண ரசிகனுக்கு கூட படம் பார்க்கும் ஆவலை உருவாக்கிவிட்டார் படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அந்தவகையில் ‘சைத்தான்’ படம் வெளியாவதற்கு முன்னரே சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார் பிரதேப் கிருஷ்ணமூர்த்தி..

இந்தப்படத்தில் ஏற்கனவே ஒரு கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகி இருந்தநிலையில் தற்போது, இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுக்கும் வரலட்சுமிக்கு இந்தப்படத்தில் அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.. சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Comments are closed.