
போலீஸ் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என பரபர ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், லவ் என அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்துகொடுப்பதில் வல்லவர் ஹரி.. அதனால் தான் ஹாலிவுட் படங்களுக்கு அடுத்ததாக நம் தமிழ் ரசிகர்கள் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிங்கம்’ படத்திற்கு மட்டும் தான்.
ஹரியுடன் இணைந்து ஏற்கனவே ‘சிங்கம்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களில் அதிரடி ஆட்டம் ஆடிய சூர்யா, தற்போது ‘சி-3’ மூலமாக புதிய ஆட்டத்திற்கு தயாராக இருக்கிறார். வரும் டிச-16ஆம் தேதி இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்னதாக வரும் நவ-27ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறார்கள். அதை தொடர்ந்து தெலுங்கிலும் இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளார்கள்.. அந்த விபரங்கள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Comments are closed.