நயன்தாராவுக்கு கிடைத்த சுஜாதா டைட்டில்..!

227

kolaiyuthir-kalam-1

பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிப்பதைவிட தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படம் என்றால் எந்த இயக்குனருக்கும் நயன்தாராவின் கால்ஷீட் கிடைத்துவிடும் போலத்தான் தெரிகிறது. அந்தவகையில் மாயா, அறம் ஆகிய படங்களை தொடர்ந்து ‘கொலையுதிர்காலம்’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா..

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதா எழுதிய பரபரப்பான தொடர்கதையின் பெயர்தான் ‘கொலையுதிர் காலம்’.. ஆனால் அந்த கதைக்கும் இந்தப்படத்துக்கும் டைட்டிலைத்தவிர வேறு எதுவும் சம்பந்தம் இல்லை. பில்லா-2, உன்னைப்போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இது க்ரைம் த்ரில்லர் படம் என்பதைத்தான் டைட்டிலே சொல்லிவிடுகிறதே…

Comments are closed.