கல்யாண பாடலுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் பூ

110

பாசமலர் படத்தில் இடம்பெற்ற ‘வாராயோ தோழி வாராயோ’ பாடல் மற்றும் ‘மணமகளே மருமகளே வா வா’ ஆகிய பாடல்கள் தான் கல்யாண வீடுகளில் இதுநாள் வரை பிரபலம். இனிமேல் வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம்பெற்றுள்ள “வாங்கம்மா.. வாங்கப்பா.. வாங்கண்ணே.. வாங்கத்தே.. வா மாமா…..” என்று உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இனிமேல் இந்தப்பாடல்தான் கல்யாண மண்டபங்களில் பிரதானமாக இருக்கும் என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ராஜமோகன்.

இந்த பாடல்காட்சியை படமாக்கியபோது தினமும் 50ஆயிரம் ரூபாய் செலவில் ஐந்து நாட்களுக்கு பூ வாங்க மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்களாம். கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக நடிக்கிறார் மோனல் கஜ்ஜார். சந்தானம், தம்பிராமையா, கோவை சரளா முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் எழுத, இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

Leave A Reply

Your email address will not be published.