யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமலேயே வெற்றிகரமாக வணக்கம் சென்னை படத்தை இயக்கி முடித்துவிட்டார் கிருத்திகா உதயநிதி. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அக்டோபர்-11ல் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் ரிலீஸ் சம்பந்தமான வேலைகளில் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறார் கிருத்திகா. இந்தப்பட ரிலீஸின்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’படத்தின் ட்ரெய்லரையும் தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.