இயற்கை, ஈ, பேரண்மை என மூன்றே படங்கள்தான் இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். ஆனாலும் மூன்று படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டருக்கு இழுத்துவந்தன. பேராண்மை படத்துக்குப்பின் எஸ்.பி.ஜனநாதன் நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.
ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்க, பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறார் ஜனநாதன். படத்தின் பெயர் புறம்போக்கு. படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸுடன், ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
தற்போது இந்தப்படத்திற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக குலுமணாலியில் முகாம் இட்டிருக்கிறார் ஜனநாதன். ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.