
இந்த ஆண்டுக்கான சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களுக்கென்று மட்டும் “வைரமுத்து நூலரங்கம்” என்ற பெயரில் இரு அரங்குகள் இக்காட்சியில் இடம் பெறுகின்றன. கவிஞர் வைரமுத்து எழுதிய நூல்கள் மட்டும் அந்த அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இந்த அரங்கில் வைரமுத்துவின் மொத்த நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும். புத்தகக் காட்சியில் தன் அரங்குக்கு ஜூன் 4 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வாசகர்களைச் சந்திக்கக் கவிஞர் வைரமுத்து வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் நூல்களில் கையொப்பமிடுகிறார். வாசகர்கள் அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
Comments are closed.