
சுமார் 20 வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் ‘கருத்தம்மா’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மகேஸ்வரி.. ஸ்ரீதேவியின் அக்கா மகள் இவர். இப்படி சொல்வதை விட ‘உல்லாசம், நேசம்’ ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தாரே அந்த மகேஸ்வரியின் சகோதரர் அவிஷேக் ‘காத்தடி’ என்கிற படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தன்ஷிகா. இந்தப்படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் குழந்தை திருடர்களான அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் இருவரும் பணத்திற்காக பேபி சாதன்யாவை கடத்துகிறார்கள். போலீஸ் ஆபிசராக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் கதையாம். சமீபத்தில் வெளியான ‘கத சொல்லப்போறோம்’ படத்தை இயக்கிய கல்யாண் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
Comments are closed.