
‘வை ராஜா வை’ படத்தை ஆரம்பித்தது முதல் ரிலீஸ் செய்வது வரை ஒன்றல்ல.. மிகச்சரியாக இரண்டு வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்தப்படத்தை 2௦13 ஏப்ரல்-23ல் பூஜையுடன் ஆரம்பித்தவர், சரியாக இரண்டு வருடம் கழித்து வரும் ஏப்ரல்-24ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்.. இந்தப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அதற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப்படத்தில் நகைச்சுவை நாயகனாக விவேக்கும் சிறப்பு தோற்றத்தில் தனுஷும் நடிக்கிறார்கள். டாப்சியும் முக்கியமான ரோலில் நடிக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்கிறார்.
Comments are closed.