கமல் படத்திற்கு தடை நீங்கியது..!

145

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம்’ இப்போது கமல் நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மலையாள இயக்குனரான சதீஷ் பால் என்பவர் தான் இயக்கிய ‘ஒரு மழக்காலத்து’ படத்தின் கதையும் த்ரிஷ்யம்’ படத்தின் கதையும் ஒரே தளத்தில் அமைந்துள்ளது என்றும் அதனால் ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு தடைவிதிக்கவேண்டும் என கேரளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

மேலும் தனது படத்தை தமிழில் ‘க்ரைம் த்ரில்லர்’ என்ற பெயரில் தான் ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதனால் அதேபோன்ற கதை அமைப்புடன் உள்ள ‘த்ரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யக்கூடாது என்றும் அதில் கூறி இருந்தார்.

நேற்று முன்தினம் இந்தவழக்கு விசாரணை முடிவடைந்து “மனுதாரர் குறிப்பிட்டுள்ளதுபோல த்ரிஷ்யம் படம் அவரது கதையில் இருந்து காப்பியடிக்கப்படவில்லை” என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம் இதன்மூலம் கமல் படத்திற்கான தடை நீங்கியது.

Comments are closed.