பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல சாதுவான ஆளாகத்தான் தெரிகிறார் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன். ஆனால் சட்டையை கழட்டினாலோ பயங்கரமான பாடி பில்டராக சிக்ஸ் பேக்ஸ் காட்டி மிரட்டுகிறார். தற்போது தான் நடித்துவரும் ‘காட்டும் மழையும்’ படத்திற்காக 17 கிலோ எடையை குறைத்துள்ளார் உன்னிமுகுந்தன்.
அதுவும் தவிர தான் ஐந்து மாதங்களாக இந்தப்படத்திற்காக தனது உடல் உடையை குறைத்து பாடி ஃபிட் ஆக எடுத்துக்கொண்ட முயற்சிகளை ‘உன்னிமுகுந்தன் ஃபேட் ட்டூ ஃபிட்’ என்ற பெயரில் இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார்.
தற்போது லால்ஜோஸ் இயக்கத்தில் ‘விக்ரமாதித்யன்’ என்ற படத்தில் நடித்துவரும் உன்னிமுகுந்தன், பேரரசு மலையாளத்தில் இயக்கியுள்ள ‘சாம்ராஜ்யம்-2’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.