ட்ரெண்ட் செட்டராக மாறிவிட்ட அனிருத், படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார். ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத், அதேபோல இப்போது அவர் நடித்துவரும் ‘மான் கராத்தே’ படத்திற்கும் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு யாரைப் பாடவைக்கலாம் என யோசித்தவருக்கு உடனே ஞாபகம் வந்தவர் தேனிசைத்தென்றல் தேவா தான். பின்னே.. 90களில் கானா பாடல்கள் மூலமாக சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவராயிற்றே இவர்.
அதனால் தேவாவை அழைத்து ‘மான் கராத்தே’ படத்தின் க்ளைமாக்ஸ் பாடலை பாடவைத்துவிட்டார் அனிருத். கூடவே தானும் சேர்ந்து இந்தப்பாடலை பாடியிருக்கிறார். கானா பாடல்களிலேயே இது வித்தியாசமாக இருக்கும் என்கிறார் அனிருத்.