உனக்கென்ன வேணும் சொல்லு – விமர்சனம்

208

கருவில் இருக்கும் குழந்தையிடம் உன்னை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வேன் என வாக்கு கொடுக்கும் தந்தை வெளிநாடு செல்கிறார். அவர் வருவதற்குள் தோழியின் தீய அறிவுரையைக் கேட்டு, குழந்தையை அநாதை ஆசிரமத்தில் சேர்க்கிறார் தாய். கணவனிடம் குழந்தை இறந்ததாக நாடகமாடும் தாய், பின்னர் வேறு ஒருவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆகிறார்..

இப்போது வெளிநாட்டில் இருந்து வரவழைத்த அந்த தாயையும், உள்ளூரில் இருக்கும் தந்தையையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மிரட்டுகிறது ஒரு அமானுஷ்ய சக்தி.. ஒரு மந்திரவாதியின் உதவியுடன் அதை ஆராய்ந்ததில் அவர்களுக்கு பிறந்து பின்னர் இறந்துபோன குழந்தையின் ஆவி என்பது தெரிய வருகிறது..

கருவில் இருக்கும்போது தனக்கு கொடுத்த வாக்கை ஏன் நிறைவேற்றவில்லை என நியாயம் கேட்கிறது குழந்தையின் ஆவி.. இறுதியில் அந்த பாசமுள்ள தந்தை இறந்துபோன மகளுக்காக எடுக்கும் முடிவு என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஏம்மா.. இப்படியெல்லாம் கூட பேய் கிளம்பி வருவதற்கு காரணம் இருக்காம்மா என ஆச்சர்யப்பட வைக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.. வழக்கமான பேய்ப்பட மிரட்டல் காட்சிகளுக்கு இதிலும் குறைவில்லை. குறிப்பாக பேயோட்டும் மந்திரவாதியான மைம் கோபி, பங்காளவில் பேய் இருப்பதாக உணரும் தருணம் மிரட்டல்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நம்மை மிரட்டுவதிலேயே குறியாக இருக்கின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெறுகின்றன. படத்தில் குழந்தையின் தாய்தந்தையாக வரும் ஜாக்லின் பிரகாஷ், தீபக் பரமேஷ் இருவருக்குமே நடிப்பதற்கு சம வாய்ப்பு. சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.. மைம் கோபியின் நடிப்பு எக்சலண்ட்..

இறந்துபோன குழந்தையின் எலும்புக்கூடு பல வருடங்களாக அதன் வளர்ப்புத்தாயின் வீட்டில் இருப்பது போன்ற சில லாஜிக்குகள் இடிக்கின்றன. ஆனால் பேய்ப்படங்களில் தான் லாஜிக் பார்க்க கூடாது என்பார்களே.. கடைசியில் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற தன்னை தியாகம் பண்ணும் தீபக் பரமேஷ் நெஞ்சை கனக்க வைத்துவிடுகிறார்.

Comments are closed.