மது அருந்தும் காட்சிகளை தவிர்க்கும் உதயநிதி..!

136


சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சரக்கடிப்பார் உதயநிதி.. ஆனால் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் காதல் தோல்வியால் புலம்பினாலும்கூட சந்தானம் மட்டுமே ட்ரிங்ஸ் அருந்துவார். உதயநிதி அதை தொடாமல் பேசிக்கொண்டு மட்டும் இருப்பார்.

இதற்கு உதயநிதி சொல்லும் காரணம் நம்மை வியக்க வைக்கிறது..”என்னுடைய படங்களில் நான் மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் மது அருந்துவது போல நடிப்பதை தவிர்த்துவிடுகிறேன்.. இயக்குனரின் கதைப்படி காட்சிகளில் நான் தலையிட மாட்டேன்.. ஆனால் இனிவரும் என்னுடைய படங்களில் இது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்கவேண்டி இருந்தாலும் கூட, நான் மது அருந்துவதில்லை என முடிவே செய்திருக்கிறேன்..” என்கிறார் உதயநிதி.

மேலும் “நான் வந்திருப்பது பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து. நான் நடிக்கும் கேரக்டர்கள் மூலமாக சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை. அதுவும் தவிர நமக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்கிறதே” என்றும் காரணம் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த முடிவு நிச்சயம் பாராட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.