ஸ்டைலிஷான படங்களின் இயக்குனர் கௌதம் மேனனின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள ஒற்றப்பாலம்.. ஆனால் ஒரு முன்னணி இயக்குனாராக மாறிய கௌதம் தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாலும் மலையாளத்தில் வெளியாகும் நல்ல படங்களையும் பார்க்க தவறுவது இல்லை…
அப்படி மலையாள படங்களை கவனித்து வரும் கௌதமை வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர்களான துல்கர் சல்மானும், ஃபஹத் ஃபாஸிலும் ரொம்பவே கவர்ந்துவிட்டார்கள். “அவர்கள் இருவரும் வித்தியாசமான, மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்கள். அப்படி நடிப்பதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்’ என பாராட்டியுள்ளார் கௌதம் மேனன்.