“ஐ ட்யூனில் முதல் தமிழ்ப்படம் ‘பீட்சா’ இல்லை” – கார்த்திக் சுப்பராஜ் மறுப்பு

192

2003ல் தொடங்கப்பட்ட ஐ ட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர், இன்று இசை உலகின் தாலாட்டு தொட்டிலாக இயங்கி வருகிறது. இரண்டு லட்சம் பாடல்களுடன், தொடங்கப்பட்ட இந்த ஐ ட்யூன்ஸ் ஸ்டோர், இன்று மூன்று கோடியே 50 லட்சம் பாடல்களுக்கும் மேலாகக் கொண்டு, 119 நாடுகளில், இயங்கி வருகிறது.

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் ஆப்பிள் ஐ ட்யூன் ஸ்டோரில் இடம்பெற்றதில்லை என்றும் அப்படி முதன்முதலில் ஐ ட்யூனில் வெளியான தமிழ்ப்படத்தின் பாடல்கள் என்றால் அது ‘பீட்சா’ தான் என்றும் ஒரு செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால் ‘பீட்சா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதை மறுத்துள்ளார். ஐ ட்யூனில் முதன்முதலில் இடம்பிடித்த தமிழ்ப்படம் விஜய் நடிப்பில் 2007ல் வெளியான ‘போக்கிரி’ தான் என்றும் ‘பீட்சா’ தான் முதல் படம் என்பது தவறான செய்தி என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனலும் ‘பீட்சா’ ஐ ட்யூன் ஸ்டோரில் இடம்பிடித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றும் தன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.