லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ட்யூன் அனுப்பும் ஏ.ஆர்.ரஹ்மான்

102

கௌதம் மேனன் டைரக்‌ஷனில் சிம்பு நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில நாட்களாக சிம்புவும் கதாநாயகி பல்லவி சுபாஷும் பங்குபெறும் பாடல்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார் கௌதம். கதாநாயகன், நாயகியை முதன்முதலாக சந்திக்கும் காட்சிக்கான பாடல் அது. இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார். அவர் சென்னையில் இருக்கும்போதே முழுக்கதையையும் அவரிடம் சொல்லிவிட்டார் கௌதம். அதன்பின் தான் கமிட் செய்திருந்த மற்ற வேலைகளை கவனிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் பறந்துவிட்டார் ரஹ்மான்.

இருபது நாட்களுக்கு முன், ரஹ்மானை தொடர்புகொண்ட கௌதம் தனக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்படுகிறது என்று கேட்க, அதற்கு ரஹ்மானும் தலையசைத்திருக்கிறார். ‘ஸ்கைப்’ எனப்படும் வீடியோ சாட்டிங் மூலமாக அவர் அங்கிருந்து டியூன் போட, இங்கிருக்கும் மதன்கார்க்கி அதற்கேற்ற மாதிரி பாடல் வரிகளை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

பின்னர் இங்கே இருக்கும் ஸ்டுடியோவில் பாடல் பதிவானது. அதை ரஹ்மான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஸ்டுடியோவில் மிக்ஸ் செய்து இங்கே அனுப்ப மூன்றுமணிநேரத்தில் தான் விரும்பியபடி ஒரு பாடலை ரஹ்மானிடமிருந்து வாங்கிவிட்டார் கௌதம் மேனன். இப்போது பாடலை படமாக்கியும் வருகிறார். டெக்னாலஜியின் வேகத்திற்கு இணையாக செயல்படும் கௌதமின் வேகம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.