வரும் 20ஆம் தேதி ‘பிரியாணி’, ‘என்றென்றும் புன்னகை’ உட்பட தமிழில் ஐந்து படங்கள் ரிலீஸாவது ஒரு பக்கம் இருக்க, ஆமிர்கான் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பி வந்த ‘தூம்-3’ படமும் கூடவே வெளியாகிறது.
தமிழ்நாட்டில் இந்தப்படத்தை திரையிடும் உரிமையை சத்யம் சினிமாஸ் வாங்கியுள்ளது. இந்தப்படத்திற்காக ஏற்கனவே 150 தியேட்டர்கள் வரை புக் பண்ணப்பட்டுள்ளன. இது 20ஆம் தேதிக்குள் 175லிருந்து 200ஆக உயரவும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் தமிழ்நாட்டில் வெளியான தியேட்டர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். அதேபோல ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் வசூலையும் ஆமிர்கானின் ‘தூம்-3’ முறியடிக்கும் என்றும் ஆருடம் சொல்லப்படுகிறது.