‘என்றென்றும் புன்னகை’ படம் நன்றாக இருக்கிறது என படம் பார்த்தவர்களின் வாய்மொழியாக செய்தி பரவ, தியேட்டர்களில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தப்படத்தில் த்ரிஷாவின் அலட்டல் இல்லாத நடிப்பை அனைவரும் பாராட்டுகின்றனர். இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் த்ரிஷா.
இந்த சந்தோஷத்தோடு தற்போது சென்னை ரினோஸின் சி.சி.எல்-4ன் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் த்ரிஷா. இதுகுறித்து சென்னை ரினோஸின் நிர்வாகிகளில் ஒருவர் சொல்லும்போது சென்னைப் பெண்ணான த்ரிஷாவை 2014ஆம் வருடத்திற்கான தூதராக நியமித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
ஜனவரி-25ல் ஆரம்பிக்கும் இந்த சி.சி.எல்-4 கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, சென்னை, கொச்சி ஆகிய நகரங்களில் சென்னை அணி விளையாடும்போது கலந்து கொண்டு அணியை உற்சாகப்படுத்த இருக்கிறார் த்ரிஷா.