தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவரும் ‘ராமையா வஸ்தாவையா’ படத்தை அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா நடிக்கின்றனர். ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.
இதே தயாரிப்பாளரின் இன்னொரு தயாரிப்புதான் ராம்சரண் நடித்துள்ள ‘எவடு’ திரைப்படம். இந்தப்படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகி. கூடவே எமி ஜாக்சனும் இருக்கிறார். முக்கியமான வேடத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜூன். இந்தப்படம் தயாராகி வெகு நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் தற்போது ராம்சரண் நடித்துள்ள ஜஞ்சீர்(தூபான்) ரிலீஸாகி ஓடிக்கொண்டிருப்பதால் முதலில் ஜூனியர் என்.டி.ஆர் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர் தில் ராஜூ.