’காதல் சொல்ல ஆசை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், “இன்றைக்கு வருகிற புதிய இளைஞர்கள் சினிமாவில் ஈசியாக ஜெயிக்கிறார்கள் அதற்கு காரணம் அவர்களிடமிருக்கும் அபார திறமை. அதுவும் நாளைய இயக்குனர்கள் நிகழச்சியில் குறும்படத்தின் மூலம் அறிமுகமாபவர்கள் வியக்க வைக்கிறார்கள். பாரதிராஜா எப்படி ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தாரோ அதே போல இவர்களும் ட்ரெண்ட் செட்டராக இருக்கிறார்கள். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து சாதிக்கிறார்கள்.” என்று பேசினார்.