இதுவரை வெளிவராத கதைக்களத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது ‘இங்க என்ன சொல்லுது’ படம். காமெடியாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக நகைச்சுவை நடிகர் வி.டி.வி.கணேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
சந்தானம், ஆண்ட்ரியா, பாண்டியராஜன், மயில்சாமி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், ஸ்வர்ணமால்யா ஆகியோருடன் முக்கிய வேடத்தில் சிம்புவும் சேர்ந்து இந்தப்படத்தில் வி.டி.வி.கணேஷுக்கு பக்கபலமாக நடித்துள்ளார். அதுவும் தவிர இந்தப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இசை அமைப்பாளர் தரண்குமார் ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வானவில் போல ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நிறமும் ஒரு குணமும் உண்டாம். இதில் முக்கிய அம்சம், கணேஷ் இரண்டு பாடல்களை எழுதியிருப்பதோடு அவரே ஒரு பாடலை பாடியும் இருக்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை(டிச-5) நடைபெறுகிறது.