வேண்டிக்கொண்ட விஷயம் நல்லபடியாக முடிந்தால் கடவுளின் சன்னிதானத்திற்குச் சென்று காணிக்கை செலுத்துவதுதானே முறை. அதைத்தான் செய்திருக்கின்றனர் அஜித்தும் சிறுத்தை சிவாவும். அப்படியென்ன காணிக்கை என்று கேட்கிறீர்களா?
‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பை நல்லபடியாக முடித்த கையோடு திருப்பதிக்கு கிளம்பிய அஜித்தும் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவும் ஏழுமலையானை தரிசித்த கையோடு, வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்து முடி காணிக்கை அளித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
அஜித் இப்படி வெளிப்படையாக திருப்பதி சென்று சாமி கும்பிடுவதும் மொட்டை அடித்திருப்பதும் (மீடியா வெளிச்சத்திற்கு வருவது) இதுதான் முதன்முறை. பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ‘வீரம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.