நவ-24ல் டிக் டிக் டிக் ட்ரெய்லர்..!

132

tiktiktik trailer

மிருதன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நவம்பர் 24ம்தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்தப்படத்தில் ஜெயம் ரவி மகன் ஆரவ் நடித்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.