ஜி.வி.பிரகாஷை கண்டு வியந்த பாலிவுட் டைரக்டர்..!

101

Anurag Kashyap praise gvp

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மட்டுமல்ல.. மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்பவர் தான் அனுராக் காஷ்யப்.. அப்படிப்பட்டவர் ஜி.வி.பிரகாஷை பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் ஹே…யாருப்பா நீ.. எனக்கே உன்ன பாக்கணும்போல இருக்கே” என ரமணா பாணியில் டிவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் பாலாவின் நாச்சியார் பட டீசர் வெளியானது அல்லவா..? அதை பார்த்துவிட்டு அனுராக் காஷ்யப் சொன்னது இதான்.. “ஹலோ லிட்டில் ஜீனியஸ்.. என்னப்பா செஞ்சிக்கிட்டு இருக்கே..நீ வித்தியாசமாகவும் நல்ல ஆலாவும் தெரியுறயே..பாலா படம் பண்ணி முடிச்சுருக்க.. உனக்குள்ள எத்தனை ஆச்சர்யம் வச்சிருக்கேப்பா” என்கிற விதமாக ட்வீட் பண்ணியுள்ளார்.

பாலிவுட் ஜாம்பவான் இயக்குனரிடம் இருந்தே பாராட்டு தேடிவந்ததால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன ஜி.வி.பிரகாஷ், “ஓ மை காட்.. யாரை என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆக நினைத்திருக்கிறேனோ அவரிடமிருந்தே பாராட்டு செய்தியா..? லவ் யூ சோ மச் ப்ரோ..” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments are closed.