கௌதம் கார்த்திக்கை உருமாற்றம் செய்யுமா இந்திரஜித்..?

267

indrajith release

மணிரத்னம் என்கிற மோதிரக்கையால் குட்டுப்பட்டு, வாரிசு நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். ஒரு கட்டத்தில் இவர் சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என என்னும் விதமாகத்தான் ஏனோதானோ என படங்களில் நடித்துவந்தார். ஒவ்வொரு படத்திற்கும் வருடக்கணக்கில் இடைவெளி விட்டார்..

ஆனால் என்ன ஆச்சர்யம் பாருங்கள்.. சினிமாவின் சூட்சுமத்தை புரிந்துகொண்ட கௌதம் கார்த்திக், இந்த வருடம் மட்டும் ‘முத்துராமலிங்கம்’, ‘ரங்கூன்’, இவன் தந்திரன்’, ‘ஹரஹர மஹாதேவகி’ என நான்கு படங்களை ரிலீஸ் செய்துவிட்டார்.. இதில் முத்துராமலிங்கம் தவிர மற்ற மூன்றுமே சோடை போகாத படங்கள் என கௌதம் கார்த்திக்கிற்கு பெயர் வாங்கித்தந்தன.

இதோ இப்போது இந்த வருடத்திலேயே அவரது ஐந்தாவது படமாக ‘இந்திரஜித்’, வரும் நவ-24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘சக்கரக்கட்டி’ படத்திற்கு பிறகு கலைப்புலி எஸ்.தாணுவின் மகனான கலாபிரபு இயக்கியுள்ள படம் இது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிச்சயம் கௌதம் கார்த்திக்கை இது அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்பது நன்றாகவே தெரிகிறது.

அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கேபி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜ்வீர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேக்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Comments are closed.