ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி சூப்பர்ஹிட்டானது வெள்ளித்திரை கண்ட வெற்றி வரலாறு. அந்த வெற்றிதான் மீண்டும் இந்திசினிமா பக்கம் போகாமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸை, இப்போது இந்தியில் துப்பாக்கி படத்தை பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்யவும் வைத்திருக்கிறது.
தற்போது விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய திரைப்பட சர்வதேச விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்றுள்ள துப்பாக்கி சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உட்பட பத்து பிரிவுகளில் படம் பரிந்துரை செய்யப்படுள்ளது.