‘இரும்பு குதிரை’, ‘அரண்மனை’ என தனது படங்கள் தொடர்ந்து வெளியானதாலும் அதில் ‘அரண்மனை’ படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாலும் குஷியாக இருக்கிறார் ராய்லட்சுமி ( அட.. நம்ம லட்சுமிராய் தாங்க). ராய்லட்சுமியை பொறுத்தவரை அவர் பேயாக நடிக்கிறாரோ இல்லையோ நடிக்கின்ற படத்தில் பேயை பார்த்து பயப்படவாவது செய்யவேண்டும்.. அது போதும் என்கிறார்களாம்.
அந்தவகையில் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ படங்களை தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ராய்லட்சுமியை தேடி வந்திருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப்படம் முந்தைய இரண்டு படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்கிறார் ராய்லட்சுமி. டிசம்பரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறதாம்.
Comments are closed.