சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்னும் இரண்டு பாடல்கள் தான் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். ஒன்று ஓப்பனிங் பாடல்.. இன்னொன்று சோனாக்ஷி சின்ஹாவுடனான டூயட்.
இதில் ஒப்பனிங் பாடலை ஹாங்காங், மக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அசத்தலான பாடல் ஒன்றை போட்டுத்தந்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். அனேகமாக தீபாவளி முடிந்த பின்னர் இந்த மாதத்தின் இறுதி நாட்களில் பிளைட் ஏற திட்டமிட்டிருக்கிறது லிங்கா’ டீம்.
அதற்கு முன்னதாகவே அதாவது நாளையில் இருந்து ரஜினி – சோனாக்ஷி டூயட் பாடலை ஹைதராபாத்தில் படமாக்க ஆரம்பிக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். இந்தப்பாடலை தீபாவளிக்கு முன்னர் முடிக்க திட்டம். ரவிகுமாரை பொறுத்தவரை எல்லாமே திட்டப்படி சொன்ன நேரத்திற்கு நடைபெறும் என்பதால் ரஜினியின் பிறந்த நாள் பரிசாக ‘லிங்கா’வை எதிர்பார்க்கலாம்.
Comments are closed.