
வரும் தீபாவளி ரிலீசாக சரியாக நவம்பர்-1௦ஆம் தேதி வெளியாகிறது கமலின் தூங்காவனம். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சென்சார் அதிகாரிகளுக்கு இந்தபடம் திரையிட்டு காட்டப்பட்டது. 2 மணி 7 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்..
கமலின் நீண்டநாள் உதவியாளரான ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்தப்படத்தில் த்ரிஷா, ஆஷா சரத், பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது என பெரும் நடசத்திர கூட்டணியே இடம்பெற்றுள்ளது. த்ரிஷா இதில் முதல்முறையாக போலீஸாக நடித்துள்ளார். கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரன் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்கிற பிரெஞ்சு படத்தை தழுவி படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
Comments are closed.