நா.முத்துக்குமாருக்கு சிங்கப்பூர் அரசு அழைப்பு..!

189

NA.MUTHUKUMA
பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் கடல் கடந்து வாழும் மக்களையும் வசீகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை. லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தினாலும் கூட, தமது பாடல்களில் அழகு தமிழ் வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகிறார் இந்த கவிஞர்,. இப்போது இன்னொரு சிறப்பு வாய்ப்பு ஒன்றை தமிழ் இலக்கியம் இவருக்கு அளித்திருக்கிறது.

சிங்கப்பூர் அரசு அக்டோபர் 31 முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை சர்வதேச எழுத்தாளர்கள் திருவிழாவை நடத்துகிறது சிங்கப்பூரில். தமிழ், சீனம், மலாய், ஜப்பான், கொரியா, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழி எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் தமிழ் மொழி சார்பாக நா.முத்துக்குமார் கலந்து கொண்டு தமிழ் இலக்கியம் குறித்தும், கவிதைகளின் தற்கால போக்கு குறித்தும் உரையாற்ற இருக்கிறார்.

Comments are closed.