
‘காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் அண்ணன் தம்பியாக நடிக்கிறார் அல்லவா.? இதில் அண்ணன் கேரக்டருக்கு லட்சுமி மேனனும், தம்பிக்கு (பேபி) ஷாம்லியும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள்.
தனுஷின் தந்தையாக நடிக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.. டைரக்சனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பு பக்கம் கவனம் செலுத்திவரும் அவர் ஜனவரியில் இருந்து இவர் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.
Comments are closed.