
சாப்ட் ஹீரோ அட்டகத்தி தினேஷை இவ்வளவு சீக்கிரம் போலீஸ் கேரக்டரில் பார்ப்போம் என யாராவது நினைத்திருக்க முடியுமா..? ஆனால் நம்புங்கள்.. ‘திருடன் போலீஸ்’ படத்தில் தினேஷ் போலீஸ் ஆபிசராக நடிக்கிறார்… எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள இந்தப்படத்தை கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ளார்.
அட்டகத்தி, ரம்மி புகழ் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மறைந்த கவிஞர் வாலி ஏற்கனவே ‘ஆரண்யகாண்டம்’ படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றை இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு. இந்தப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Comments are closed.