‘ஷெர்லக் ஹோம்ஸ்’ குறும்படத்தில் நடித்த ‘தலக்கோணம்’ ஜிதேஷ்..!

65

தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ படத்தின் கதாநாயகன் ஜிதேஷ். இவரை ராம்ராஜ், மகாராஜா, 
சென்னை சில்க்ஸ், ஸ்ரீதேவி டெக்டைல்ஸ் போன்ற பல பெரிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஏரோனேட்டிக்கல் இஞ்ஜினியரிங்முடித்திருந்தும் சிறு வயது முதலே நடிக்கும் ஆர்வம் கொண்ட இவர் இதற்க்கு முன்பு நடித்த முதல் படம் ‘சிக்கிமுக்கி’. ஆனால் சினிமாவில் என்பதற்காக நுழையவேண்டும் நடன இயக்குனர் ஸ்ரீதரிடம் முறையாக நான்கு வருடம் நடன பயிற்சியும்
பெற்றிருக்கிறாராம்.
இதுமட்டுமல்லாமல் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். கலைஞர்  டீவியின் நாளைய இயக்குனரில் வெளிவந்த ‘சத்ய பிரமாணம்’ என்ற 
குறும்படத்தில் நடித்தார்.
குறிப்பாக ஆங்கிலத்தில்  மிகப்பெரிய  நாவலான  ஷெர்லக் ஹோம்ஸ் என்ற நாவலின் ஒரு பகுதியை உரிமம் வாங்கி லண்டனில் எடுக்கப்பட்ட குறும்படத்தில் இவர்தான்  நாயகனாக நடித்துள்ளார். இனி அடுத்து இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் தான் இவரை முன்னோக்கி கொண்டுசெல்லும்என நம்புவோம்..

Comments are closed.