
அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது இப்போது ஊரறிந்த விஷயம் ஆகிவிட்டது. ஆனால் இதை வைத்து தாங்கள் ஒப்பந்தம் செய்த படத்தில் இருந்து அமலாபாலை நீக்கிவிட்டதாக தெலுங்குபட நிறுவனம் ஒன்று கூறியுள்ளது..
அமலாபால் தனது திருமண விஷயத்தை தங்களிடம் மறைத்துவிட்டார் என்றும் மேலும் திருமணமான பின் தங்களது படத்தில் அமலாபால் நடித்தால் அது அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தாது என்றும் இதற்கு காரணமாக கூறியிருந்தார்கள். நாம் கூட இதை செய்தியாக வெளியிட்டிருந்தோம்..
ஆனால் இதுகுறித்து அமலாபால் தன்னிலை விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தப்படத்திற்காக மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தார்கள். நானும் கொடுத்தேன். ஏப்ரல் முதல் வாரத்தில் ஆரம்பித்து மே-15க்குள் படப்பிடிப்பு நடத்துவதாகத்தான் சொன்னார்கள். மே-15ல் முடிந்துவிடக்கூடிய படப்பிடிப்பிற்காக ஜூன் மாதம் நடக்க இருக்கும் என் திருமணத்தைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டிய தேவை என்ன இருக்கிறது.?
தவிர, படப்பிடிப்போ வெளிநாட்டில். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எதையும் அவர்கள் செய்வதற்கான அறிகுறியே தென்படவில்லை. தவறை அவர்கள் பக்கம் வைத்துக்கொண்டு என்னைப்பற்றி தவறான செய்திகளைக்கூறி என் மீது அவர்கள் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள். நான் இப்போது சொல்லும் விளக்கம் கூட என்னை நன்கு தெரிந்தவர்கள் உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காகத்தான்” என்று கூறியுள்ளார் அமலாபால். இவர் சொல்றதுதான் சரியா இருக்கு.
Comments are closed.