அரண்மணை தர்பாரில் அட்டகாசமான காமெடி காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு அம்மாவின் மடியில் ஓய்வெடுக்க மதுரைக்கு போயிருக்கிறார் தெனாலிராமன் வடிவேலு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அரண்மணையின் வெளிப்புறத்தையும் நகரத்தின் தோற்றத்தையும் அமைக்கும் பணி ஏவி.எம்மில் வேகமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் சில பத்திரிகைகளில் படப்பிடிப்பு நின்று விட்டதாக வந்த தகவல் வடிவேலுவை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இது பற்றி வடிவேலுவிடம் பேசிய போது,”எதுக்குதாண்ணே இப்படி தப்பான செய்திய போடுறாங்க.80 நாள் படப்பிடிப்பில் 20 நாள் படம் முடிஞ்சிடுச்சு.சும்மா கலகலகலனு ஷீட்டிங் போயிகிருக்குண்ணே.படம் சீனுக்கு சீன் சிரிப்புதான்.அடிவயிறு வலிச்சு தான் வீட்டுக்கு போகப்போறாங்க பாருங்க.ஒரு கேப் விட்டு படம் பண்றதால பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்குண்ணே அந்த அய்யனாரப்பன் துணையில படத்தை நல்லபடியா முடிச்சு எல்லாரையும் சிரிக்க வைக்கப்போறண்ணே.”என்றார் வடிவேலு.