வடிவேலு இல்லாமல் சினிமா இல்லை – சூரி பெருமிதம்

81

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக டப்பிங்கில் இருந்த சூரியிடம் ”என்ன ஹீரோ ஆயிட்டீங்க போல” என்றதும் பதறிப்போனார்.

”வேண்டாம் பாஸ் நான் காமடியனாகவே இருந்துட்டுப் போறேன். சினிமாவில் பதினாறு வருஷம் சின்னச்சின்ன வேஷம் கேட்டு போராடிகிட்டிருந்தேன். ஒரு சீன்லயும் ரெண்டு சீன்லயும் தலை காட்டிகிட்டிருந்த எனக்கு இன்னிக்கு படம் முழுக்க வர்றமாதிரி வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்கு என்னோட இயக்குனர்கள் தான் காரணம். இந்த இடத்தை நான் தக்க வெச்சுகிட்டாலே போதும். அதுக்காகதான் நான் போராடிகிட்டிருக்கேன்.”என்றார்.

”வடிவேலு சினிமாவில் இல்லாததால உங்க காட்டுல படமழைனு சொல்லலாமா?’

”ஒரு நாள் தொடங்கி முடியிறதுகுள்ள மூணு தடவையாவது வடிவேலு டயலாக்கை பேசமால் யாருக்கும் பொழுது முடியிறதில்லையே பாஸ். அப்புறம் எப்படி வடிவேலு சினிமாவில் இல்லைனு சொல்றீங்க. வடிவேலு இல்லாமல் சினிமா இல்லைனுதான் சொல்லனும்.” என்று பெருமிதப்பட்டு பேசினார் சூரி.

Leave A Reply

Your email address will not be published.