சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த்தும் அவரது நண்பனாக ரமேஷ்கண்ணாவும் நடிக்கிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித் கிராமத்து இளைஞனாக புதிய தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டீஸர் இன்றுமுதல் சென்னையில் உள்ள தியேட்டர்களிலும் நாளை முதல் மற்ற ஊர் தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது. ஆரம்பம் டீஸருக்கு கிடைத்த வரவேற்பை விட இதற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.