தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தினசரி மேலும் 75 காட்சிகள் அதிமாக திரையிடப்படுகின்றன. மேலும் கேரளாவில் இந்தப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கவே கோழிக்கோட்டிலும் திரையிடப்பட்டதோடு இன்னும் சில தியேட்டர்களிலும் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறதாம்.