“இந்த புது வருடம் சென்னையில்தான்” – ஸ்ருதிஹாசன்

113

கடந்த இரண்டு வருடங்களில் சென்னையில் தனது தந்தை வீட்டில் ஸ்ருதிஹாசன் இருந்த நாட்கள் மிகவும் குறைவுதான். இதனால் தன் தனது தந்தையான கமல்ஹாசனை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக உணர்கிறாராம் ஸ்ருதி. மேலும் மும்பையில் அவரது வீட்டில் மர்ம நபர் புகுந்து ஸ்ருதியை தாக்க முயற்சித்த சம்பவத்திற்குப் பின் சென்னையில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு வரும் ஞாபகமாகவே இருக்கிறாராம் ஸ்ருதி.

என்றைக்கு இந்தி, தெலுங்குப் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தாரோ அப்போதே ஹைதராபாத், மும்பை என படப்பிடிப்பிற்கு ஏற்றவாறு அந்தந்த நகரங்களிலேயே வீடு பார்த்து தங்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். ஸ்ருதி ஆனால் தொடர்ச்சியாக நடக்கும் படப்பிடிப்புகள்தான் சென்னை வருவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனவம்.

அதனால் இந்த வருடம் தனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் என்பதை உறுதி செய்துவிட்ட ஸ்ருதி, புதுவருடக் கொண்டாட்டத்தின் போது தன் தந்தையுடனேயே இருக்க முடிவு எடுத்திருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.