வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது. இந்தவருடம் நடைபெற இருப்பது 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா. வருகின்ற டிசம்பர் மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி தான்.
முழுக்க, முழுக்க ICAF என்னும் இந்தத் திரைப்பட அமைப்பில் உள்ள திரைப்பட இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், பிற தொழிநுட்ப கலைஞர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் நடைபெறும் இந்த விழா வருடா வருடம் மெருகேறிக் கொண்டே செல்கிறது.
மேலும் இந்த விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கான போட்டியும் நடைபெற இருக்கிறது. சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது, சிறந்த இரண்டாவது தமிழ்ப்படத்துக்கான விருது, சிறப்பு ஜூரி விருது ஆகிய பிரிவுகளில் போட்டியிடும் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த போட்டியில் கலந்துகொள்ளும் திரைப்படங்கள் 16.10.12 லிருந்து 15.10.13க்குள் சென்சார் செய்யப்பட்டவையாக இருத்தல் அவசியம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.11.13.
மேலும் தொடர்புக்கு:
Tel|Fax: +91 44 2821 2652
Tel: +91 44 6516 3866
Mob: 9840151956
Email : thangaraj_icaf@hotmail.com