வில்லன் இரட்டை வேடங்களில் நடித்ததாக கேள்விப்படிருக்கிறீர்களா? கண்ணுக்கு எட்டியவரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ படம் மட்டும் தான் தெரிகிறது. அதில் தான் பிரதீப் ராவேத் அண்ணன் தம்பியாக இரட்டைவேடங்களில் வில்லனாக நடித்திருந்தார். உண்மையிலேயே இது சினிமாவைப் பொறுத்தவரை ஆச்சர்யமான, அரிதான விஷயம் தான்.
இப்போது மலையாளத்திலும் இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்தப் போகிறர் இயக்குனர் ரஞ்சித். மோகன்லாலை வைத்து இவர் இயக்கிவரும் ‘ஜி ஃபார் கோல்டு’ படத்தில் வில்லனாக நடிக்கும் சித்திக்கிற்கு இரு வேடங்கள் என்பதுடன் இரண்டுமே வில்லன் வேடங்கள்தான்.
கஜினியில் கூட இரண்டு வில்லன்களில் அண்ணன் யார், தம்பி யார் என தெரியாதபடி இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். ஆனால் இந்தப்படத்தில் இரண்டு வேடங்களுக்கும் உருவத்தில், மேனரிசங்களில் வித்தியாசம் காட்ட இருக்கிறார் சித்திக்.
பின்குறிப்பு: ஒரு ஹீரோ டபுள் ஆக்ஷன் ரோல் பண்ணியதுடன் அந்த இரண்டு கேரக்டரிலும் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார் என்றால் அது உண்மையிலே அபூர்வமான விஷயம் தான். இது உலக சாதனையும் கூட. இந்த முறியடிக்கப்படாத சாதனை மலையாள சினிமாவுக்கு மட்டுமே சொந்தம்.
உலக சினிமாக்களிலேயே இப்படி இரட்டை வேடங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்த பெருமை நடிகர் ஜெயராமுக்கு மட்டும்தான் உண்டு. 2009ஆம் வருடம் பிரபல மலையாள இயக்குனர் கே.மது இயக்கிய ‘ரகசிய போலீஸ்’ என்கிற படத்தில்தான் இந்த அதிசயம் நடந்தது.
இன்னொரு அதிசயம் என்னவென்றால் ஒருவர் நிகழ்காலத்திலும் இன்னொருவர் ப்ளாஸ்பேக்கிலும் என பழைய பாணியில் வந்துபோகாமல், இரண்டு ஜெயராம்களும் ஒரே கொலைவழக்கை படம் முழுதும் ஒன்றாக இணைந்து துப்பறிந்து கண்டுபிடிப்பார்கள். ஹேட்ஸ் ஆஃப் டைரக்டர் மது & ஜெயராம்.