இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசையமைப்பதும் ஜீ.வி.பிரகாஷ் தான். இவர்களுடன் ஒரு பலமான டெக்னிக்கல் டீமும் கைகோர்த்து களம் இறங்க இருக்கிறது. ஜீ.வி.பிரகாஷ் நடிப்பது பற்றி அவ்வப்போது டிப்ஸ் கொடுப்பது என விஜய், சிம்பு இருவரும் நிறைய உதவுகிறார்களாம். இதற்கு ஒருபடி மேலேபோய் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் வெற்றிமாறனும் இவருக்கு நடிப்பு பயிற்சி அளிப்பதற்காக ஆட்களையே அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் நடிகரானதில் இவரது காதல் மனைவி சைந்தவிக்கும் சந்தோஷம் தான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தனது கணவருக்கு போட்டிருக்கிறாராம். அது முத்தக்காட்சியில் நடிக்கக்கூடாது என்பதுதான். பள்ளி மாணவர்கள் கதை என்பதால் இந்தப்படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதி அளிக்கிறார் இயக்குனர் மணி நாகராஜ்.