ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக வளர்ந்துவரும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சோதனைகள் ஏற்படவே செய்யும். அப்போது அவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி தங்களை நிரூபிக்க தயாராவார்கள். அந்த நேரத்தில் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களையோ, அல்லது தான் ஹிட் கொடுத்து கைதூக்கிவிட்ட நடிகர்களையோ தேடிப்போவதும் சகஜமான நிகழ்வுதான்.
அப்படி ஒரு சூழ்நிலை இயக்குனர் ராஜேஸுக்கும் ஏற்பட்டுள்ளது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்துள்ளது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அந்த முயற்சியில்தான் இரண்டு கதைகளை ஒரே நேரத்தில் எழுதிவருகிறார் ராஜேஸ். ஒன்று ஜீவாவிற்கு, இன்னொன்று ஆர்யாவுக்கு.. இதில் அனேகமாக ஆர்யாவுக்கான கதைதான் முதலில் தயாராகும்போல தெரிகிறதாம். இருவரையுமே வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்தான் ராஜேஸ். அதனால் அவர் கால்ஷீட் கேட்டால் உடனே தர தயாராகவும் இருக்கிறார்கள் ஜீவாவும் ஆர்யாவும். இவர்களோடு ராஜேஸின் வலதுகரமான சந்தானமும் கைகொடுக்க, சூட்டோடு சூடாக விரைவிலேயே அறிவிப்பு வந்தாலும் வரலாம்.