‘மௌனகுரு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருள்நிதி நடித்து வரும் படம் ‘தகராறு’. கணேஷ் விநாயக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை கிளவ்ட் நைன் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிந்து சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
படத்தை வரும் டிசம்பர் – 6ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். இதற்குமுன் அருள்நிதி நடித்த ‘மௌனகுரு’ இரண்டு வருடங்களுக்கு முன் இதே மாதிரி டிசம்பர் மாதம் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் தரண்குமார். இவர் பாரிஜாதம், போடா போடி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Very interesting topic, regards for putting up.Blog money