சாதனை பெண்மணி பி.சுசீலாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

244

p.suseela

இன்றைய சூழலில் ஒரு பின்னணி பாடகி வருடத்திற்கு 30 பாடல்கள் பாடினாலே மிகப்பெரிய அதிசயம்.. ஆனால் கடந்த நாற்பது வருடங்களில் அதாவது கடந்த 1960 முதல் தற்போது வரை 17, 695 பாடல்கள் பாடியுள்ளார் என்றால் பின்னணி பாடகி பி.சுசீலா தான் உண்மையான சாதனை பெண்மணி.. தற்போது அவர் பெற்றுள்ள கின்னஸ் விருது கூட, அவரால் பெருமை பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.

கடந்த 1952-ல் தனது திரைவாழ்கையை தொடங்கிய பி.சுசீலா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் ஜோடிப்பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள் பாடியுள்ளார். நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா சுசீலாவின் இந்த சாதனைக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் தனக்கு மட்டுமின்றி தனது தாயாருக்கும் பின்னணி பாடல்களைப் பாடியவர் சுசீலா என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.